மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அருப்புக்கோட்டையில் ஸ்ரீஜெகந்நாதர் தேர் பவனி

அருப்புக்கோட்டையில் இஸ்கான் அமைப்பினர் சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஜெகந்நாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:23 am

DIN

அருப்புக்கோட்டையில் இஸ்கான் அமைப்பினர் சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஜெகந்நாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயில் வளாகம் முன் தொடங்கிய இத்தேரோட்ட நிகழ்ச்சிக்கு இஸ்கான் அமைப்பின் குருஜி ஜெயபதாக ஸ்வாமி தலைமை வகித்தார்.தேரோட்ட நிகழ்ச்சியின் தொடக்கமாக பக்தி ஆஸ்ரேய வைஷ்ணவா, சுக தேவா, பக்தி வினோத் ஸ்வாமி, பானு ஸ்வாமி ஆகியோரின் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். 
விருதுநகர் சாலை, பெரிய கடை வீதி, ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில் பகுதி, திருச்சுழி சாலை, வடக்கு ரத வீதி வழியாகச் சென்று தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன் தேரோட்டம் நிறைவடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில்  சிறப்பு சங்கீர்த்தனமும், குசேலர் எனும் ஆன்மிக நாடகமும், ஜெகந்நாதர் லீலை பற்றிய ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை   இஸ்கான் கிளை  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.