சிவகாசியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடம் கட்ட பூமி பூஜை
சிவகாசியில் ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவற்கான


சிவகாசியில் ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவற்கான பூமி பூஜை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திருத்தங்கலில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே ஆணையூர் ஊராட்சியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவகத்திற்கு கட்டடம் கட்ட பூமி பூஜை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையத்தில் விருதுநகர் மண்டலத்திற்கு 8 புதிய அரசுப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளும் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 515 அதிநவீன பேருந்துகள் இயக்கத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளது. விருதுநகர் மண்டலத்திற்கு தற்போது 8 நவீன பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 35 பேருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ வில்லிபுத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட ரூ. 5 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மகேந்திரகுமார், துணை மேலாளர் பாலசுப்பிரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சிவகாசிநடராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிசந்திரன், விருதுநகர் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அய்யாச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...