போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விருதுநகரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

விருதுநகரில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்ட நான்கு ஆண்டுகளில் சேதமடைந்து சிமெண்ட் கலவை பெயர்ந்து கீழே விழுந்து

Updated On :9 ஜூலை 2018, 1:25 am

விருதுநகரில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்ட நான்கு ஆண்டுகளில் சேதமடைந்து சிமெண்ட் கலவை பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. எனவே, பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் கல்லூரி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், நாள்தோறும் பல்வேறு கிராம ஊராட்சிச் செயலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் கட்டடத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிமெண்ட் கலவை பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால், கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால், அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். 
எனவே சேதமடைந்த புதிய அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.