தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிவகாசி அருகே குப்பையில் கிடந்த பட்டாசு வெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் காயம்

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை குப்பையில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளுக்கு தீ வைத்த போது அதுவெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:24 am

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை குப்பையில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளுக்கு தீ வைத்த போது அதுவெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சங்கர் மகன் அருண்குமார் (15). செல்வம் மகன் பிரதீபன் (14). இவர்கள் இருவரும் முறையே பத்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் உள்ள ஒரு ஓடையில் கொட்டப்படிருந்த பட்டாசு கழிவில் விளையாட்டாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
 அப்போது  அதில் இருந்த பட்டாசு வெடித்து சிதறியதில் இருவரது உடையிலும் பட்டு தீ பிடித்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். 
இதையடுத்து இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.