வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

Updated On :9 ஜூலை 2018, 1:23 am

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். அதில், தமிழக அரசு உத்தரவுக்கு மாறாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு துணையாக செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.