தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

"பட்டாசுத் தொழில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம்'

விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலான பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :7 ஜூன் 2018, 7:10 am IST

விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலான பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று 216 பட்டாசுஆலைகளும், சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையில் உரிமம் பெற்று 221 பட்டாசு ஆலைகளும், நாக்பூர் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையில் உரிமம் பெற்று 535 பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகின்றன.
 மேலும் இந்த ஆண்டு இதுவரை 4 புதிய பட்டாசு ஆலைகள் தொடங்குவதற்கு தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் பெருகி வருவதுபோல், பட்டாசு உற்பத்தி வேலைக்கு மிகவும் குறைந்தளவிலேயே முன் வருகின்றனர்.
 பட்டாசு மருந்து கலவை, மருந்து செலுத்துதல், முடிவடைந்த பட்டாசுகளை பேக்கிங் செய்தல், திரி தயாரிப்பு என அனைத்து வேலைகளும் கையினால் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு சில ஆலைகளில் மருந்து கலவை செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் ஒப்புதலோடு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு எப்போதும் உள்ளது. இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள் தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்கி வேலைக்கு சேர்க்கிறார்கள். முன்பணம் பெறும் தொழிலாளர்களில் சிலர், சில மாதம் பணம் பெற்ற ஆலையில் வேலை செய்து விட்டு, வேறு ஆலையில் முன்பணம் பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் வங்கிகளில் கடன் பெற்றுதான் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தயாரிப்பு முடங்கிப்போனால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த தாமதமாகும்.எனவே பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பலமுனை தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
உலகில் அதிகமாக பட்டாசு உற்பத்தி செய்யும் சீன நாட்டில் பட்டாசு, இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு, உரிய நேரத்தில் சரக்கு அனுப்ப இயலும்.சரவெடி பட்டாசு இங்கு கையினால் பின்னப்படுகிறது. சீனாவில் இயந்திரம் மூலம் பின்னப்படுகிறது.
பட்டாசுக்கு மருந்து செலுத்தவும் சீனா இயந்திரத்தை பயன்படுத்துகிறது. இங்கு தொழிலாளர்கள் கையினால் மருந்து செலுத்துகிறார்கள். பட்டாசு தேவைக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், விபத்தினை தவிர்க்கவும், விலையை குறைக்கவும், பட்டாசுத் தொழிலில் இயந்திரமயமாக்குவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.
 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், தீப்பெட்டி தொழிலுக்கு வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை உருவானது. இதையடுத்து அரசு, பகுதி இயந்திர  தீப்பெட்டி ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது.எனவே மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அனுமதிக்கப்பட்டுள்ள வேதியியல் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப, பட்டாசு தயாரிபில் இயந்திரம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:
 தேவைகள் உள்ள பட்டாசு ஆலைகளில், குறிப்பிட்ட வேலைகளுக்கு இயந்திரம் அமைக்க அரசு அனுமதி வழங்கலாம். அப்படி அனுமதிக்கப்பட்டால் உற்பத்தி சீராக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.