அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரிலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு கோயிலில் வழிபாடு செய்வதற்கும், அலுவல் நிமித்தமாகவும் சென்று வருவாதகக் கூறப்படுகிறது.
முன்னர், மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் 20 நிமிடத்துக்கு ஒன்று என்ற கணக்கில் அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து சென்றன. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமலும், காத்திருக்க வேண்டிய அவசியமின்றியும் வசதியுடன் சென்று வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதுரை-திருச்செந்தூர் வழித்தடப் பேருந்துகள் அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல், புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால், அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து மட்டுமே திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன.
இதில், சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை என ஏராளமான பயணிகள் உட்கார இடம் கிடைக்காமல் திருச்செந்தூர் வரை சுமார் மூன்றரை மணி நேரம் நின்றுகொண்டே செல்கின்றனர். எனவே, அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது மதுரையிலிருந்து வரும் பேருந்துகள் அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து செல்லும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

