பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ராஜபாளையம் பகுதியில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ராஜபாளையம் வட்டாரத்தில் வீணாகும் மழைநீரை சேமிக்க நீர்நிலைகள், கால்வாய் தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ராஜபாளையம் வட்டாரத்தில் வீணாகும் மழைநீரை சேமிக்க நீர்நிலைகள், கால்வாய் தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ராஜபாளையம் சேத்தூர் தேவதானம் பகுதியில் பெரும்பாலான பகுதியில் குடிநீர், விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
நிலத்தடி நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. உள்ளூர் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. மழை நீர் சேமிப்பும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 எப்போதாவது கிடைக்கும் மழைநீரும் வீணாகிறது. விவசாயம், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மழைநீர் சேகரிப்பு, கண்மாய் மற்றும் நீர் வரத்து, கால்வாய் பராமரிப்பு பணியை கோடை காலத்தில் தொடங்க வேண்டும்.
 ராஜபாளையம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு மழை நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இப்பணியை தொடங்கினால் தான், மழை காலத்தில் தண்ணீர் தேங்கும். 
 மேலும், விவசாய நிலங்களில் பண்ணைகுட்டை அமைக்க வேண்டும் என ராஜபாளையம் வட்டார விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.