இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிராமத்தில் வங்கி இணையதள சேவை சரிவர இயங்காததால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினிகள் சரியாக இயங்காததால் கட

Updated On :14 மே 2018, 7:02 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினிகள் சரியாக இயங்காததால் கடந்த 8 மாதங்களாக வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தற்கான கனரா வங்கியின் கிளை பெருமாள்தேவன் பட்டியில் உள்ளது. கடந்த 8 மாதங்களாகவே இந்த வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினி சரியாக செயல்படவில்லை எனக் கூறி பொதுமக்களை வங்கி அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணம் போட முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும், நகைக்கடன் வைக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.திங்கள்கிழமையும் இதே நிலையே காணப்பட்டது.
17 ம் தேதி வியாழக்கிழமை வரும்படி வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வங்கியில் வேப்பங்குளம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி,வைத்தியலிங்காபுரம், படிக்காசுவைத்தான்பட்டி, கீழப்பொட்டல்பட்டி, வடக்கு கரிசல்குளம், இனாம்கரிசல்குளம், லட்சுமியாபுரம், காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பாலசுப்பிரமணியாபுரம், கங்காகுளம், துலுக்கன்குளம், கன்னார்பட்டி, கன்னார்பட்டிகாலனி, பெருமாள்தேவன்பட்டி, பிள்ளையார்குளம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளார்கள். கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் வங்கிக்கு வந்து வேலை முடியாமல் திரும்புவதால், நாள் முழுவதும் வீணாகிறது என தெரிவித்தனர் . ராணுவ கிராமம் என்று கூறப்படும் பெருமாள்தேவன்பட்டியில் உள்ள நூற்றுக் கணக்கான முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியதாரர்களும் வங்கி சேவையை பயன்படுத்த இயலாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொதுமக்கள், ஓய்வூதியதாரரின் நேரத்தையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு, வங்கியின் சேவை தடையின்றி கிடைத்திடவங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.