ராஜபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்(54).கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தினருக்கு மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியை மறக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது மகன் பால்பாண்டி அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் பால்பாண்டி அளித்த புகாரின்பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

