/

சாத்தூரில் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் வெள்ளக்கரை சாலையில் உள்ள நந்தவனத்தில் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமைநடைபெற்றது.

Updated On :21 மே 2018, 6:26 pm

விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் வெள்ளக்கரை சாலையில் உள்ள நந்தவனத்தில் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமைநடைபெற்றது.
இதற்கு நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலர், எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிர்வாகிகளுக்கு வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலர் முனீஸ்வரன், நகர ஜெ. பேரவைச் செயலர் வேல்சோலைராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.