அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்: வாடிக்கையாளர்கள் அவதி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் கடந்த 2 வாரங்களாக பூட்டிக் கிடப்பதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 6:26 pm

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் கடந்த 2 வாரங்களாக பூட்டிக் கிடப்பதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது சம்பள பணத்தை கூட அந்த ஏடிஎம் மையத்தில் எடுக்க முடியாத நிலையுள்ளது. இதனால், பிற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் அவர்கள் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் தலா ரூ.23 சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த ஏடிஎம் மையத்தின் வங்கி சார்பில் விருதுநகர் பகுதியில் வேறு இடங்களில் ஏடிஎம் மையம் இல்லாததால், வெளியூர்களுக்கு செல்லும் போது அங்குள்ள சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையம் எங்குள்ளது என தேடி அலையும் நிலையும் நிலை உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏடிஎம் மைம் செயல்படாதது குறித்து வங்கி நிர்வாகிகளிடம் கேட்ட போது, இணையதள தொடர்பு கிடைக்கவில்லை அல்லது ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர் ஏடிஎம் மையத்தில் பணம் வைக்க காலதாமதம் ஆகிறது என கூறுகின்றனர்.
இதனால், இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்வங்கி தனது ஏடிஎம் மையங்களை திறந்து முழுமையான சேவை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.