தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

காமராஜர் விருது பெற்ற  மாணவருக்கு பாராட்டு விழா

சென்னையில் ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசு வழங்கிய காமராஜர் விருது பெற்ற ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சென்னையில் ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசு வழங்கிய காமராஜர் விருது பெற்ற ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் கடந்த 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறப்பிடம் பெற்று, தமிழக அரசின் காமராஜர் விருதும், ஊக்கத் தொகை ரூ.20, 000 -ம், நற்சான்றிதழும் பெற்ற மாணவர் ஆர்.மணிகண்டனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 
மேலும் 30 நொடியில் அதிகவேகம், 30 நொடியில் ஒரு குதியில் இரு முறை சுற்றுவது, 3 நிமிடம் அதிக கயிறு தாண்டுதல் ( ஸ்கிப்பிங்), 45 நொடிக்குள் பல வகைத் திறன்களை வெளிப்படுத்துதல் என்ற நான்கு நிலைகளில் இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் கிருஷ்ணகிரியில் நடத்திய போட்டியில் இப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி எஸ்.தர்ஷிணி, 17 வயதிற்குட்பட்டோர் போட்டியில் வெற்றி பெற்று, தமிழக அணிக்காக தேர்வு பெற்றார். அக்டோபர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழக அணியில் இவர் விளையாடுகிறார். சிறப்பிடம் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ மாணவியரைப் பள்ளிச் செயலர்  என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா,  என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத்  தாளாளர்  மஞ்சுளா, அறக்கட்டளை உறுப்பினர் 
என்.கே.ராம்விஷ்ணு ராஜா, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் பாராட்டிக் கெளரவப்படுத்தினர். பள்ளித் தலைமையாசிரியர் பி.ஏ.ரமேஷ், உடற்கல்வி இயக்குநர் எஸ்.வி.வெங்கடேசன் ஆகியோரும் மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.