
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாக்கியம்(53). இவரது மகள் பெத்தம்மாள்(20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் பெத்தம்மாள் பார்த்து எழுதியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்த வகுப்புப் பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பெத்தம்மாள் தனது பெற்றோரை அழைத்து வர கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பெத்தம்மாள் நடந்த விஷயத்தை தனது தந்தை பாக்கியத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இனிமேல் கல்லூரி செல்ல விருப்பம் இல்லையெனவும் கூறியுள்ளார். இதையடுத்து கல்லூரி முதல்வரிடம் பேசி மீண்டும் கல்லூரி செல்ல ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை சமாதானம் செய்துள்ளார்.
ஆனாலும் பெத்தம்மாள் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து புதன்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெத்தம்மாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பாக்கியம் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது பெத்தம்மாள் தூக்கில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாக்கியம் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





