சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்து 6 மாதத்துக்கு மேலாகியும் விளக்குகள் அமைக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே ரூ. 13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, கடந்தாண்டு ஜூலை 4 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர், இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கின.
ஆனால், இந்த பாலத்தில் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி, பாலத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்களும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, புதிய பாலத்தில் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
