மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:28 am IST

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ரயில்வே பீடர் சாலை, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழாவில், அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கலாநிதி, நகரச் செயலர் எம். முகம்மது நயினார், ஒன்றியச் செயலர் மூக்கையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்-மதுரை சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், விருதுநகர் மேற்கு ஒன்றியச் செயலர் ஆறுமுகம், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் ராஜ்குமார், கிழக்கு மாவட்ட மாணவரணிச் செயலர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கான இலவச தாய்-சேய் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா  தொடக்கி வைத்தார்.
முகாமில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவர்கள் கலா, சபரீஸ் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிவகாசி மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா தலைமையிலான அதிமுகவினர், தேரடியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையம் வந்தனர். அங்குள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பேருந்து நிலையம் முன்  ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர், தேர்தல்களில் வெற்றி பெற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நகரின் 33 வார்டுகளிலும் அதிமுக கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் எம்.எல்.ஏ. சந்திரபிரபா வழங்கினார்.
சிவகாசி: நகர அதிமுக சார்பில், சிவன் கோயிலின் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் அசன் பத்ருதீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் கட்சியின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. பின்னர், பராசக்தி காலனி உள்ளிட்ட பல இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
திருத்தங்கல் நகர அதிமுக சார்பில், கடை வீதியில் உள்ள அண்ணா சிலை முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கு அக்கட்சியின் நகரச் செயலர் பொன் சக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, 5 ஆவது வார்டில் உள்ள சமுதாயக்கூடத்தில், மருத்துவர் ஜெயபால் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. அம்மா உணவகத்தில் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சாத்தூர்: அதிமுக நகர, ஒன்றியம் சார்பில் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு, அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிமுக நகரச் செயலர் வாசன் டெய்சிராணி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் வேலாயுதம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற விழாவில், அக்கட்சியின் நகரச் செயலர் ஜி.ஆர். முருகன் தலைமை வகித்தார். அதில்,  ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கழக அமைப்பு சாரா ஒட்டுனரணி மாநில துணைச் செயலர் இளங்கோவன், மாணவரணி மாவட்டச் செயலர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.