தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விருதுநகரில் இலவச இருதய சிகிச்சை முகாம்:10 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில், 200-க்கும் மேற்பட்ட 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:30 am IST

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில், 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 10 குழந்தைகளுக்கு சென்னையில் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 விருதுநகர் சுழற் சங்கம், சென்னை அப்போலோ குழந்தை மருத்துவமனை இணைந்து, டிவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 
இம்முகாமில், மதுரை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், இருதய படபடப்பு, நடுக்கம், நினைவு இல்லாமல் இருத்தல், உயரம், எடை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். 
அதில், இருதயத்தில் குறைபாடுடைய 10 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக  அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
முன்னதாக, முகாமை சுழற் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ஷாஜகான் தொடக்கி வைத்தார். இதில், ராஜபாளையம் மருத்துவர் கோதண்டராமன், சுழற் சங்கத் தலைவர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபரும், சுழற் சங்கத் தலைவருமான இதயம் முத்து செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.