விருதுநகர் மாவட்டத்தில் எட்டு இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த 2,500 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், 2003 ஏப்ரல் மாதத்திற்கு பின்பு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 3500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக "ஜாக்டோ- ஜியோ' அமைப்பினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு "ஜாக்டோ-ஜியோ' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அய்யம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இதைத் தொடர்ந்து மறியலுக்கு முயன்ற 150 பெண்கள் உள்பட 263 பேரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் திருச்சுழி சந்திப்பில் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மறியலுக்கு முயன்ற 170 பெண்கள் உள்பட 290 பேர், வெம்பக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திலகராஜ் தலைமையில் மறியலுக்கு முயன்ற 160 பெண்கள் உள்பட 256 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 1500 பெண்கள் உள்பட 2500 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவில்லை. இதனால் பள்ளிகள் சத்துணவு அமைப்பாளர்களால் திறக்கப்பட்டது. மேலும் அந்தப் பள்ளிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 22 சதவீதம் பேர் மட்டும் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரதவீதி-தெற்குரதவீதி சந்திப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி "ஜாக்டோ- ஜியோ' அமைப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 330 பெண்கள் மற்றும் 87 ஆண்களை போலீஸார் கைது செய்து திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


