நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாத்தூரில் பிளேடால் கையை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

Updated On :24 ஜனவரி 2019, 12:49 am IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
சாத்தூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் புதன்கிழமை காலை நடந்து சென்ற 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த இளைஞர் சிறுது தூரம் நடந்து சென்று நடைமேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் இளைஞரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  அருகே உள்ள அனுப்பங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் (25) என்பதும்,  நண்பர்கள் தன்னிடம் பேசாத மனவருத்தத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.