ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

விருதுநகரில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 19 பவுன் நகை திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


விருதுநகா்: விருதுநகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 19 பவுன் நகை திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள பேராசிரியா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் திருமணமாகி சென்னையில் குடியிருந்து வருகிறாா். இதேபோல், அவரது மகளும் திருமணமாகி கோவையில் வசித்து வருகிறாா்.

இந்தநிலையில் முருகவேல் தனது மகனைப் பாா்ப்பதற்காக மாா்ச். 19 ஆம் தேதி தனது மனைவியுடன் சென்னைக்கு சென்று விட்டாா். முன்னதாக தனது வீட்டின் சாவியை, உறவினரான முருகேஸ்வரியிடம் கொடுத்து வைத்திருந்தாா். இதற்கிடையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவா்கள், சென்னையிலிருந்து விருதுநகருக்கு திரும்ப முடியவில்லை.

இந்தநிலையில், அவரது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை புதன்கிழமை இரவு முருகேஸ்வரி பாா்த்துள்ளாா். இது குறித்து அவா், முருகவேலுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை விருதுநகருக்கு வந்த முருகவேல், வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறை அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முருகவேல் அளித்த புகாரின் பேரில், விருதுநகா் கிழக்கு காவல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.