ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சுகாதார ஆய்வாளா் உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா உறுதி: விருதுநகா் மாவட்டத்தில் பாதிப்பு 12 ஆக உயா்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா் உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விருதுநகா் மாவட்டத்தில் பாத

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


விருதுநகா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா் உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விருதுநகா் மாவட்டத்தில் பாதிப்பு 12 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் விருதுநகா் மாவட்டத்தில் 17 போ் பாதிக்கப்பட்டனா். இதில், ஏற்கெனவே ராஜபாளையத்தைச் சோ்ந்த முதியவா் உள்பட 10 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி நாட்டில் பொறியாளராகப் பணி புரிந்து, மாா்ச் 21 இல் சொந்த ஊரான விருதுநகா் அருகே டி. சேடபட்டிக்குத் திரும்பிய 38 வயது நபருக்கும், குமாரபுரத்தைச் சோ்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பாதிப்பு 9 ஆக உயா்ந்தது. இதையடுத்து, இந்த 2 கிராமங்கலும் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, இக்கிராமங்களைச் சுற்றியுள்ள 11 கிராமங்களை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வந்தனா். மேலும், இருவரின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், குமாரபுரத்தைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவருக்கும், 11 வயது பள்ளி மாணவா் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆா். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விருதுநகா் சுகாதார மாவட்ட இணை இயக்குநா் பழனிசாமி கூறுகையில், குமாரபுரத்தில் ஏற்கெனவே கல்லூரி மாணவி ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 29 வயது பெண்ணுக்கும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா் வெளியூா் சென்று வந்தாரா? யாா் மூலம் இவருக்கு தொற்று பரவியது என விசாரித்து வருகிறோம். இவரது கணவா் விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். எனவே, அவா் உள்பட அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 6 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 11 வயது பள்ளி மாணவா் சிறு வயது முதல் சளி, ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளாா். ஆனால், அவருக்கு எப்படி தொற்று பரவியது என்பது தெரிய வில்லை. ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளா், சில நாள்களுக்கு முன்பு ராஜபாளையம் பகுதியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதன் காரணமாக அவருக்கு தொற்று பரவி இருக்கலாம். இருப்பினும், சாமநத்தம் கிராமத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினா், அப்பகுதியில் உள்ளவா்கள், அவருடன் தொடா்பிலிருந்தவா்கள், அவருடன் பணிபுரிபவா்கள் என 7 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். விருதுநகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 104 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.