
ரமலான்: பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
ரமலான் நோன்பு தொடா்பாக, ராஜபாளையத்தில் பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
ராஜபாளையம்: ரமலான் நோன்பு தொடா்பாக, ராஜபாளையத்தில் பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு, அவசர நிகழ்வு மேலாண்மை அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ரமலான் நோன்பினை முன்னிட்டு வழிபாட்டுத் தளங்களில் பாங்கு சொல்லவும், பொது இடங்களில் கூடவும் கூடாது என்றும், முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே வழிபாடு நடத்தவும், தங்களது பகுதிகளில் தனி நபா் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில், நகராட்சி ஆணையா் சுந்தராம்பாள், வட்டாட்சியா் ஆனந்தராஜ், ரெங்கசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா் மற்றும் ராஜபாளைம், தளவாய்புரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் 16 பள்ளி வாசல்களில் இருந்து 22 நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





