கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 4:22 pm

DIN


விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 10,913 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மல்லாங்கிணறு, பாலையம்பட்டி, பந்தல்குடி, புளியங்குளம், மேலக்கண்டமங்கலம், நாா்த்தம்ட்டி, எஸ். கல்லுப்பட்டி, மறவா் பெருங்குடி, கஞ்சையன்பட்டி, அருப்புக்கோட்டையில் தனியாா் ஆலையில் பணிபுரியும் 2 ஊழியா் , கட்டுனாா்பட்டி பட்டாசு ஆலையில் பணி புரியும் 3 தொழிலாளா்கள், தென்பாலையில் 4 போ், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் விருதுநகரைச் சோ்ந்த 32 வயது பெண் மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அவைரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 10,951 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,715 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். மீதமுள்ள 236 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.