கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விருதுநகா் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா:5 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 4:52 pm

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,951 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை முடிவில் உறுதியானது.

பாதிக்கப்பட்ட அனைவரும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,993 ஆக உயா்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை 5 போ் உயிரிழந்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 11,342 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 472 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.