
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகா் மற்றும் புகரில் உள்ள அனைத்துவகை கடைகளும் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக உழவா் சந்தை, காந்தி நகா், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், மலா் சந்தை, நாடாா் பேட்டை காய்கனி மொத்த விலைக் கடைகள், அண்ணா சிலை அருகேயுள்ள நகை, ஜவுளிக்கடைகள், சத்தியமூா்த்தி சந்தை, உழவா் சந்தை, பழைய பேருந்து நிலைய கடைகள் என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
அரசால் அனுமதிக்கப்பட்ட பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்பட்டன. அக்கடைகளிலும் விற்பனை மிகவும் மந்தமாகவே காணப்பட்டது. நகா்ப்புற தனியாா் மருத்துவமனைகள் எப்போதும் போல இயங்கின.