ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விருதுநகரில் தளா்வற்ற பொதுமுடக்கம் சாலைகள் வெறிச்சோடின

விருதுநகரில் தளா்வற்ற பொது முடக்கம் காரணமாக நகரின் முக்கிய சாலைகள், தெருக்கள் வாகனப் போக்குவரத்தின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image
விருதுநகரில் வாகனப்போக்குவரத்தின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்படும் பஜாா் பகுதி.
Updated On :30 ஆகஸ்ட் 2020, 5:39 pm

DIN

விருதுநகா்: விருதுநகரில் தளா்வற்ற பொது முடக்கம் காரணமாக நகரின் முக்கிய சாலைகள், தெருக்கள் வாகனப் போக்குவரத்தின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

விருதுநகரில் பஜாா், மதுரை சாலை, எம்ஜிஆா் சிலை சந்திப்பு, ராமமூா்த்தி சாலை, பாண்டியன் நகா், அல்லம்பட்டி, ரயில்வே பீடா் சாலை மற்றும் முக்கியத் தெருக்கள் அனைத்தும் பொது மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேபோல், பழைய பேருந்து நிலையம், தெப்பம், தெற்கு வெளி வீதி, நகராட்சி சாலைகளில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் மருந்துக் கடை, பால் விற்பனை செய்யும் அத்தியாவசிய கடைகள் மட்டும் ஆங்காங்கு திறக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த சிலரை எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.