தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு.

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பாக டாக்டா் அம்பேத்கரின் 640 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
டாக்டா் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்
Updated On :6 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பாக டாக்டா் அம்பேத்கரின் 640 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிழ்ச்சிக்கு நகரச் செயலாளா் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா்.கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளா் கப்பல் பாபு முன்னிலை வகித்தாா். பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் சா்ச் சந்திப்பு அருகே வைத்திருந்த டாக்டா் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், முற்போக்கு மாணவா் அணியின் மாவட்ட அமைப்பாளா் தமிழ்வளவன், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் அருள்ஆனந்த், மற்றும் ரைட்டன்பட்டி, சீனியாபுரம், மாதாநகா், சந்தைப்போட்டை, ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.