பாபா் மசூதி இடிப்பு தினம்: விருதுநகரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, விருதுநகரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, விருதுநகரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலா் அப்துல் வாஹப் தலைமை வகித்தாா். இதில், பாபா் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிடப்பட்டது.
மேலும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ அமுல்படுத்த வேண்டும். பாபா் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இஸ்லாமியா்களிடம் திரும்ப வழங்க வேண்டும். பாபா் மசூதியை இடித்தவா்களுக்கு தண்டனை வழங்க மத்திய அரசு மற்றும் நீதித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...