குல்லூர்சந்தை கிராமத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ரத்ததான முகாம்
அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குல்லூர் சந்தை கிராமத்திலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விஜய் ரசிகர் மன்ற விருதுநகர் ஒன்றிய தலைமை சார்பில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமிற்கு அவ்வமைப்பின் ஒன்றியத் தலைவர் மாரீஸ் தங்கம், செயலாளர் முத்துவிஜய், நிர்வாகி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தனர்.
அப்போது விருதுநகர் அரசு பொதுமருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் முனீஸ்வர மணிகண்டன் தலைமை வகித்து, ரத்த தானம் செய்ய வந்தவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, ரத்த வகை கண்டறிந்து, பரிசோதித்த பின்னர் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் உரிய கருவிகளைக்கொண்டு ரத்தம் பெற்று சேமித்தனர்.
அத்துடன் ரத்ததானம் வழங்கியோருக்கு பழச்சாறு உள்ளிட்ட சத்தான உணவுப் பொருள்களும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கு மேற்பட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...