அருப்புக்கோட்டையில் ஆழ்துளைக்கிணற்று நீர் சாகுபடியில் நல்ல மகசூல் தந்துள்ள பயிர்கள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மழைவெள்ளநீர் தேங்காமல் வடிந்துவிடும் பகுதிகளில் மட்டும் உளுந்து, பாசிப்பயிறு, சோளப்பயிர் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீர்ப்பாசனத்தில் செழித்து
அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலை அருகே ஆழ்துளைக்கிணற்றுநீர் சாகுபடியில் ஆளுயரத்திற்கு மேலாக செழித்து வளர்ந்துள்ள சோளப்பயிர்கள்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலை அருகே ஆழ்துளைக்கிணற்றுநீர் சாகுபடியில் ஆளுயரத்திற்கு மேலாக செழித்து வளர்ந்துள்ள சோளப்பயிர்கள்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மழைவெள்ளநீர் தேங்காமல் வடிந்துவிடும் பகுதிகளில் மட்டும் உளுந்து, பாசிப்பயிறு, சோளப்பயிர் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீர்ப்பாசனத்தில் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது அவ்விவசாயிகளிடையே மகிழ்சியைத்தந்துள்ளது.

அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கனபட்டி, ராமசாமிபட்டி, சுக்கில நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, இரும்புச்சோளம் ஆகியன சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு தற்போது செழித்து வளர்ந்து நல்ல மகசூலைத் தந்துள்ளன. இதற்கு மழைவெள்ளநீர் தேங்காமல் வெளியேற முறையான வடிகால் அமைப்பினை அமைத்ததாலேயே மகசூல் சாத்தியமாயிற்று என அவ்விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் ஆமணக்குநத்தம், சிதம்பராபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப் புழுத்தாக்கம் ஆண்டாண்டாகத் தொடர்வது அப்பகுதி விவசாயிகளிடையே பெருந்த ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் தந்துள்ளது. இதனிடையே அருப்புக்கோட்டையின் கிழக்குப்பகுதி கிராமங்களில் நெற்பயிர்கள் உரிய வடிகால்முறை இன்றி மழைவெள்ளநீரில் மூழ்கியதும் அப்பகுதி விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களில் வெள்ளநீர் தேங்காமல் முறையாக நீர்வடிந்த விவசாய நிலங்களில் நாட்டுக் காய்கறிகள், கீரைகள் நல்ல மகசூலைத் தந்தாலும் விளைச்சல் அதிகமாகி விலை சரிந்ததால் அவ்விவசாயிகள் உரிய பலன் இன்றி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com