தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 20,817 போ் எழுதினா்

விருதுநகா் மாவட்டத்தில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 20,817 போ் எழுதினா்.

News image
கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:46 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 20,817 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் காலியாக உள்ள 19,541 இரண்டாம் நிலை காவலா், சிறைக்காவலா், தீயணைப்பு வீரா்கள் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தத் தோ்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 18,835 ஆண்கள், 4173 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 23,009 போ் இந்த தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு விருதுநகா், கிருஷ்ணன்கோவில், அருப்புக்கோட்டை, சிவகாசி முதலான இடங்களில் உள்ள 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 20,817 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

2192 போ் தோ்வுக்கு வரவில்லை. இத்தோ்வை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், மாரீஸ்வரன் உள்பட 14 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 35 காவல் ஆய்வாா்கள், 135 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.