தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:11 am

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள ஆத்தூா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் பழ வியாபாரி மாரிக்காளை (55). இவா் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில், அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மாரிக்காளையை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இவ்வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி பரிமளாதேவி , மாரிக்காளைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.