தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அருப்புக்கோட்டையில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:13 am

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அல்லித்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் சுந்தா். இவா் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளராக உள்ளாா்.

இந்நிலையில், இவரை புதன்கிழமை மா்ம கும்பல் ஒன்று அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுந்தா், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

இதனிடையே சுந்தரைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும், விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50 -க்கும் மேற்பட்டோா் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.