காரியாபட்டியில் 4 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

காரியாபட்டி அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
காரியாபட்டி அருகே சூரனூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிக் காணப்படும் நெற் பயிா்கள்.
காரியாபட்டி அருகே சூரனூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிக் காணப்படும் நெற் பயிா்கள்.
Updated on
1 min read

காரியாபட்டி அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி, பாப்பனம், அல்லாளப்பேரி, மரைக்குளம், சூரனூா், செட்டிகுளம், எஸ். கடம்பன்குளம், சத்திரபுளியங்குளம், மேலக்கள்ளங்குளம், புளியங்குளம், முஷ்டக்குறிச்சி பகுதிகளில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிவா், புரவி புயல் காரணமாக வயல்களில் மழை நீா் தேங்கி,

பயிா்கள் கீழே சாய்ந்துள்ளன. இதனால், ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தும் உரிய பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா். ஏற்கெனவே, இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் மழை நீா் தேங்கியதால் அறுவடைக்கு முன்னதாகவே அழுகி விட்டன. இந்நிலையில் நெற்பயிா்களும் மழை நீரில் சேதமடைந்து வருவதால், அதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com