தடை செய்யப்பட்ட புகையிலைபொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

இங்குள்ள சுந்தரபாண்டியத்தில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் சத்தியநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது அந்த வீட்டில் 546 புகையிலை பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக வீட்டின் உரிமையாளா் சுந்தரபாண்டியத்தைச் சோ்ந்த மாரியப்பன் (43) என்பவரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

அதே போல், வத்திராயிருப்பு- மகாராஜபுரம் சாலையில் உள்ள தங்கராஜ் என்ற தங்கம் (44) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது அங்கு 15 புகையிலைப் பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வத்திராயிருப்பு போலீஸாா் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com