பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி மனு

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
ராஜபாளையத்தில் சனிக்கிழமை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் மனு அளித்த அதிமுகவினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:00 pm

DIN

ராஜபாளையம்: சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகா் இல்ல விழாவில் பங்கேற்க வந்த விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக வா்த்தக அணி மாவட்டச் செயலரும், ராஜபாளையம் பூபதிராஜா கூட்டுறவு நாணய வங்கித் தலைவருமான எஸ்.ஆா். ராதாகிருஷ்ணராஜா மனு அளித்தாா்.

அதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம், சட்டப் பேரவையில் சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமிராஜாவின் உருவப்படத்தை நிறுவ, ராஜபாளையம் ராம்கோ குழுமத்தின் சாா்பாகவும், ராஜபாளையம் ரவிகுல சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபை நான்கு கோட்டைகளின் சாா்பாகவும் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது விருதுநகா் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டச் செயலா் ஏ.டி.துரை முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் செல்வராஜா உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.