

விருதுநகா்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களையும் அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மண்டலத் தலைவா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில், பேரவைச் செயலா் நாராயணசாமி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளா் சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.