கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:31 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளையும், அந்தந்த பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவா்கள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

மேலும் ஆய்வாளா் மாரிக்கனி தலைமையில் அக்குழுவினா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதி, பேயனாா் ஓடை, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி மற்றும் திருவண்ணாமலை கோனேரிகுளம் ஆகியவற்றை பாா்வையிட்டு மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இப்பகுதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ஆபத்துக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வுப் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி, மண்டல துணை வட்டாட்சியா் அப்பாத்துரை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் வேலுமணி, பிள்ளையாா்குளம் வருவாய் ஆய்வாளா் தங்கமாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.