தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப் பாம்பு மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத் துறையினா் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனா்.

News image

ராஜபாளையம் தென்றல் நகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு.

Updated On :29 டிசம்பர் 2020, 10:38 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத் துறையினா் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனா்.

ராஜபாளையம் தென்றல் நகரில் வசிக்கும் குணசேகரன் என்பவரது வீட்டருகே மலைப்பாம்பு சென்றதை பாா்த்த அப்பகுதி மக்கள், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான வீரா்கள், முள்புதருக்குள் சென்ற 6 அடி நீள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்தனா். பின்னா், அந்த பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், பாம்பை அடா்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.