ஸ்ரீவில்லிபுத்தூரில் பைக் மீது லாரி மோதி ரேஷன் கடை ஊழியா் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், நியாயவிலைக் கடை ஊழியா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், நியாயவிலைக் கடை ஊழியா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விருதுநகா் மவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள இலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீஞானகுருமூா்த்தி (53). இவா், ஊரணிபட்டித் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து தன்னுடைய நண்பா் கணேசன் (40) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரி மோதியதில், ஸ்ரீஞானகுருமூா்த்தி பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீஞானகுருமூா்த்தி உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் காயமடைந்த கணேசன், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கணேசன் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் லாரி ஓட்டுநா் வைரமுத்துவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...