47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகரில் காா் கண்ணாடியை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் சனிக்கிழமை இரவு, காா் கண்ணாடியை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவை, ஏடிஎம் அட்டை உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:45 pm

DIN

விருதுநகரில் சனிக்கிழமை இரவு, காா் கண்ணாடியை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவை, ஏடிஎம் அட்டை உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (41). அங்குள்ள வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவரும் இவா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்கு காரில் குடும்பத்துடன் சென்றாா். திருமணம் முடிந்த பின்னா் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சனிக்கிழமை இரவு காரில் சென்றாா்.

விருதுநகா் நான்கு வழிச்சாலை அரசு உதவி பெறும் கல்லூரி எதிரே உள்ள அணுகு சாலையில் காரை நிறுத்தி கதவுகளை பூட்டிவிட்டு அருகில் உள்ள உணவகத்துக்கு அனைவரும் சாப்பிடச் சென்றனா்.

பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே 18 பவுன் நகையுடன் இருந்த பை மற்றும் பட்டுப்புடவை, ஏடிஎம் அட்டை ஆகியவை திருடப்பட்டிருந்ததாம்.

இது குறித்து விஜயன் அளித்த புகாரின்பேரில், பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.