ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னோர்களுடைய கிறிஸ்துவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னோர்களுடைய கிறிஸ்துவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் (நவ .2) ஆம் தேதி கிறிஸ்துவர்கள் கல்லறைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. முன்னோர்களை நினைவு கூறும் வகையில் நடைபெறும் நிகழ்வில் கிறிஸ்துவப் குடும்பத்தினர் இறந்த முன்னோர்கள், பெரியவர்கள் ஆகிய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்கும் வகையில் கல்லறை திருவிழா அனுசரிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்துவர்கள் திரண்டு முன்னோர்களின் நினைவிடத்தில் சென்று மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய நினைவு கூர்ந்தனர்.
கல்லறைகள் அனைத்தும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் கிறிஸ்துவர்கள், பாதிரியார்கள் கலந்துகொண்டனர்
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...