47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமுஎகச சார்பில் நூல் அறிமுகம் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பில் வெளிவந்த இரண்டு நூல்களின் அறிமுக விழா மற்றும் அமைப்பினுடைய கலைஞர்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலயா பள்ளியில்

News image
தமுஎகச சார்பில் நடந்த நூல் அறிமுகம் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.
Updated On :8 நவம்பர் 2020, 11:52 am

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பில் வெளிவந்த இரண்டு நூல்களின் அறிமுக விழா மற்றும் அமைப்பினுடைய கலைஞர்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கிளைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன் விழாவினை துவக்கி வைத்தார். எழுத்தாளர் உமர் பாருக் எழுதிய அதுர சாலை என்ற நாவலை எழுத்தாளரும் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான மணிமாறன் அறிமுகம் செய்தார். கரீம் எழுதிய இருண்ட கால கதைகள என்ற நூலை எழுத்தாளர் சங்கத்தினுடைய மாநில கௌரவ தலைவருமான தமிழ்செல்வன் அறிமுகம் செய்தார். 

தொடர்ந்து அமைப்பினுடைய கலைஞர்கள் பாராட்டப்பட்டனர். கலைஞர்கள் சார்பில் மரிய டேவிட் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில் எழுத்தாளர் கனராம புத்திரன் கவிஞர் இளங்கோவன் மற்றும் சண்முகம் நந்தன் கனகராஜ் மக்கள் மருத்துவர் பால்சாமி அறிவொளி முருகன் கருப்பையா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலாளர் நித்தியானந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.