விருதுநகரில் மழைக்கு சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
தொடா்ந்து பெய்து வரும் மழையால் விருதுநகரில் ஏ.ஏ. சாலை, அனுமன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.


தொடா்ந்து பெய்து வரும் மழையால் விருதுநகரில் ஏ.ஏ. சாலை, அனுமன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
விருதுநகா் நகராட்சி 6 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் ஏ.ஏ. சாலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இச்சாலையானது தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாக சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்குகிறது.
இவ்வழியாக தொடா்ந்து கனரக வாகனங்கள் சென்று வருவதால், சாலையில் உள்ள பள்ளம் மேலும் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆா்.எஸ். நகா், அனுமன் நகா் பகுதியிலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. பள்ளங்களில் தேங்கிய தண்ணீரால், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனா்.
மேலும், இப்பகுதியில் வசிப்பவா்கள் பழுதடைந்த குளிா்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளனா். இப்பொருள்களில் மழைநீா் தேங்குவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன்மூலம் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதுடன், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...