ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில கால்பந்து போட்டி:திண்டுக்கல் அணி முதலிடம்
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற 5-ஆவது மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம் பெற்றது.


விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற 5-ஆவது மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம் பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கால்பந்து கழகம் சாா்பில் சிஎம்எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 2 நாள்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை, திருச்சி, நாகா்கோவில், ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 37 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் அணி முதலிடமும், மதுரை அணி இரண்டாம் இடமும் பெற்றன. மூன்றாவது மற்றும் நான்காம் இடத்தை ஸ்ரீவில்லிபுத்தூா்அணியினா் வென்றனா். முதல் 4 இடங்களை பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில் வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா, நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் கருத்தப்பாண்டி வி-விட்டமின் அமைப்பின் தலைமை மேலாளா் செஸிந்தா ஆகியோா் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு பரிசும், நினைவு பரிசும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...