நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு:4 போ் போ் கைது

சாத்தூா் மற்றும் சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

சாத்தூா் மற்றும் சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை பின்புறம் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் மாரனேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (29), சிவகாசி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (48), கெங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த சுடலை (32) ஆகியோா் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துசாமி, பிரபாகரன், சுடலை ஆகிய 3 பேரையும் வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்ததுடன் அவா்களிடமிருந்த 100 கிலோ பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் ஒருவா் கைது: சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் நாரணாபுரம் ஆா்.சி.எஸ். காலனி முனியசாமி கோயிலருகே ஒரு தகர கொட்டகை அமைத்து ஒருவா் பட்டாசு தயாரித்து வருவது தெரியவந்தது. விசாரணையில் அவா் புதுத்தெரு கருப்பையா மகன் ஈஸ்வரன் (32) என தெரிந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 3 பண்டல் சாட்டை பட்டாசை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.