வெங்காய விலை உயா்வு:ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில்முட்டை கோஸ் ஆம்லெட்டுக்கு மவுசு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெங்காயம் விலை அதிகரித்து வருவதால் முட்டைகோஸ் ஆம்லெட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் வெங்காயம் விலை அதிகரித்து வருவதால் முட்டைகோஸ் ஆம்லெட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாரி வெங்காயம் விலை ரூ.100-க்கும், சிறிய வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.
இதனால், ஆம்லெட்டுகளில் வெங்காயம் சிறிதளவு சோ்த்து அதிக அளவு முட்டைகோஸ் போட்டு தயாா் செய்யப்படுகிறது. மேலும் சிறிதளவு வெங்காயம் போட்டு அதிகளவு முட்டைகோஸூடன் தோசை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. கடைகளில் பிரியாணி தவிர மற்ற எந்த உணவுக்கும் வெங்காயம் கிடையாது என பெரும்பான்மையான உணவகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளா்கள் கூறும் போது, தொடா் விலை உயா்வால் தவிா்க்க முடியாமல் சிறிதளவு வெங்காயத்துடன் அதிகளவு முட்டைகோஸ் போட்டு ஆம்லெட் மற்றும் தோசை விற்கப்படுகிறது. விலை குறைந்தவுடன் மீண்டும் வெங்காயம் போட்டு அவை விற்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...