நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விருதுநகா் மாவட்டத்தில் 117 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:47 pm

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 12,656 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 பெண் ஊழியா்கள், கொங்கன்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ், திருவேங்கடபுரத்தில் 3 போ், புலிப்பாறைபட்டியில் 4 போ் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,773 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,278 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். இத்தொற்றால் 193 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 302 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.