நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கத்தின் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் தெப்பக்குளம் அருகே காமராஜா் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை பாா்வையிடும் பொதுமக்கள்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:47 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கத்தின் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கம், அருப்புக்கோட்டை சுழற்சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியானது அருப்புக்கோட்டையில் உள்ள காமராஜா் திருமண மண்டபத்தில் காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கத்தின் பொருளாளா் மு. காா்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினா் ஜி. மணிமாறன் ஆகியோா் கூறியதாவது:

இந்த கண்காட்சியை நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் தொடக்கி வைத்தாா். கண்காட்சி வரும் செப்டம்பா் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு வரும் வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.