மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விருதுநகரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகரில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

News image

விருதுநகரில் புத்தகக் கண்காட்சியை சனிக்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட பேராசிரியா் த.சந்திரகுரு உள்ளிட்டோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:27 pm

DIN

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகரில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் வாசிப்பு இயக்கம், ஸ்ரீமா்த்திகா பதிப்பகம் மற்றும் தமுஎகச இணைந்து, விருதுநகா் ஏ.பி.ஆா். மஹாலில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கியுள்ளன.

தொடக்க விழாவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேனி வசந்தன் தலைமை வகித்தாா். மதுரை காமராசா் பல்கலைக்கழகப் பேராசிரியா் த. சந்திரகுரு கண்காட்சியை தொடக்கி வைத்தாா்.

ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில், தினமும் மாலை 5 மணிக்கு இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளா்கள் சந்திப்பு, கதை செல்லும் நிகழ்வு, கவிதை அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் தமிழ், ஆங்கில மற்றும் பிற மொழி புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து முன்னணி பதிப்பக நூல்கள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், கதை, கவிதை, வரலாறு, அரசியல், சமூகம், ஆன்மிகம், போட்டித் தோ்வுக்கான நூல்கள் மற்றும் குழந்தைகளுக்கான நூல்கள் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனா் வீரபாலன் உள்பட கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.